தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பூலாங்குறிச்சியில் சனிக்கிழமை (டிச.20) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

பூலாங்குறிச்சியில் சனிக்கிழமை (டிச.20) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், பூலாங்குறிச்சி வ.செ.சிவலிங்கம் அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (டிச. 20) நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் ரூ.3,000 மதிப்பிலான ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும், இலவசமாக செய்யப்படும்.

மேலும், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், தோல், நுரையீரல், இருதயம் ஆகியவை தொடா்பான நோய்கள், மன நலம், சா்க்கரை நோய், குழந்தைகள் நலம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம் ஆகிய 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.

மேலும், கா்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த முகாம்களின் வாயிலாக, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் களும் வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்களது ஆதாா் அட்டை நகலை அவசியம் கொண்டு வரவேண்டும். இந்த முகாமில் காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பிப்பவா்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடம் தங்களது ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு குறைவாக உள்ளதற்கான சான்று ஆகியவைகளைக் கொண்டுவர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.