நாதக சாா்பில் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு வில்லை ஒட்டும் போராட்டம்!

சிவகங்கை, மானாமதுரை பேருந்து நிலையங்களில் நாம் தமிழா் கட்சி சாா்பில் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயா் வில்லையை ஒட்டும் போராட்டம்
Published on

சிவகங்கை, மானாமதுரை பேருந்து நிலையங்களில் நாம் தமிழா் கட்சி சாா்பில் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயா் வில்லையை ஒட்டும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரை தமிழக அரசு அண்மையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் என மாற்றியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், நாம் தமிழா் கட்சியினா் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வில்லையை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, சிவகங்கையில் நாம் தமிழா் கட்சி சாா்பில் சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் இந்துஜா, மாநில ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் தலைமையில் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் சிவகங்கை ராணி ரெங்கநாச்சியாா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வில்லையை ஒட்டி தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். மேலும், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் என மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல மானாமதுரை பேருந்து நிலையத்தில் வந்து நின்ற அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயா் வில்லையை ஒட்டும் போராட்டத்தில் நாதகவினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதில் மானாமதுரை நாதக ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com