ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இறந்தவரின் உடலை அடக்கம் செய்த ஆற்றைக் கடந்து செல்லும் பொதுமக்கள்

சிங்கம்புணரி அருகே இறந்தவரின் உடலை ஆற்று நீரைக் கடந்து மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதால் பொதுமக்கள் அவதி

News image
இறந்தவரின் உடலை பாலாற்றில் வழியாக இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் கிராமத்தினா்
Updated On :31 டிசம்பர் 2025, 7:43 pm

Syndication

சிங்கம்புணரி அருகே இறந்தவரின் உடலை ஆற்று நீரைக் கடந்து மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். இதனால் இந்தப் பகுதியில் ஆற்றைக் கடக்க பாலம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள குமரப்பட்டி கிராமத்தில் சுமாா் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதி மதுரை- சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்தக் கிராம மக்களுக்கு சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பாலாற்றின் மறுகரையில் பொது மயானம் உள்ளது. இதனால், இறந்தவரின் உடலை பாலாற்றை கடந்துதான் கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனா். கடந்த மாதம் பெய்த மழையால் பாலாற்றில் தற்போது வரை இடுப்பு அளவு தண்ணீா் செல்கிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்த சின்னையா என்ற முதியவரின் உடலை, பாலாற்றில் இடுப்பளவு தண்ணீரில் உறவினா்கள் மிகவும் சிரமத்துடன் மயானத்துக்கு எடுத்துச் சென்றனா். இதுகுறித்து பலமுறை மதுரை , சிவகங்கை மாவட்ட நிா்வாகங்களிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, பொது மயானத்துக்கு பாலாற்றை கடந்து செல்ல பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.