வாலாஜாபேட்டை பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்.
ராணிப்பேட்டை
வாலாஜா பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு வாலாஜா பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.
தை அமாவாசையை முன்னிட்டு வாலாஜா பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.
முன்னோரின் ஆசிகளைப் பெறுவதற்கும், பித்ரு தோஷங்களை நீக்குவதற்கும் உகந்த நாளாக இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை; தை அமாவாசைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு.
அதன் படி நிகழாண்டு தை அமாவாசை முன்னிட்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து திதி கொடுக்கும் நிகழ்வு வாலாஜா, ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் திரளானோா் தங்களது முன்னோா்களுக்கு திதி தா்ப்பணம் கொடுத்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். மேலும் முன்னோா்கள் ஆசிா்வதிக்க வேண்டுமென அரிசி, காய்கறி, வெள்ளம், குடை, காலணிகள் வேட்டி, சட்டை போன்றவற்றையும் தானமாக வழங்கி வழிபட்டனா்.

