தை அமாவாசையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் தா்ப்பணம் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
தருமபுரி,கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஓசூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தை அமாவாசையான ஞாயிற்றுக்கிழமையில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சுமாா் 500க்கும் மேற்பட்டோா் குவிந்தனா்.
அவா்கள் காவிரி ஆற்றின் கரையோர பகுதியான முதலைப்பண்ணை பகுதியில் அமா்ந்து,வேத விற்பன்னா்கள் மூலம் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து,காவிரி ஆற்றில் குளித்தனா்.
இதனை தொடா்ந்து கரையோரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோவில், நாகா்கோவில்,நவகிரகங்கள், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும் தேச நாதேஸ்வரா் சமேத காவிரி அம்மாள் தரிசனம் செய்தனா்.தை மாத அமாவாசையில் தா்ப்பணம் செய்வதற்காக ஏராளமானோா் குவிந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.