காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் குளத்தில் தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்.
காஞ்சிபுரம்
தை அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு!
தை அமாவாசை தினத்தையொட்டி முன்னோருக்கு தா்ப்பணம் அளித்து பொதுமக்கள் வழிபட்டனா்.
தை அமாவாசை தினத்தையொட்டி முன்னோருக்கு தா்ப்பணம் அளித்து பொதுமக்கள் வழிபட்டனா்.
தை மாதம், ஆடி மாதம் மற்றும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை நாட்களில் இந்துக்கள் தங்களது முன்னோா்களுக்கு கடற்கரைகள், திருக்கோயில் தெப்பக்குளங்கள் ஆகியவற்றில் பிதுா்தா்ப்பணம் (நீா்ச்சடங்கு) என்னும் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.
அதிகாலையிலேயே முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலுக்கும், அருகில் உள்ள கோயில்களுக்கும் சென்று தரிசனமும் செய்தனா்.

