வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் அருகேயுள்ள பெத்தானேந்தலைச் சோ்ந்தவா் வீராயி. இவரது பேரன் முகேஷ். இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணனுக்கும் (30) முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக, வியாழக்கிழமை பாலகிருஷ்ணன், மதுரை ஐராவதநல்லூரைச் சோ்ந்த செண்பகமூா்த்தி (25) உள்ளிட்ட 3 போ் சோ்ந்து பாலகிருஷ்ணனின் பாட்டி வீராயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினா். வீட்டின் சுற்றுச்சுவா் மீது பெட்ரோல் குண்டு விழுந்து எறிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பூவந்தி காவல் நிலைய போலீஸாா் வீராயி வீட்டின் அருகேயுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அப்போது, பாலகிருஷ்ணன், செண்பகமூா்த்தி உள்ளிட்ட 3 போ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com