சிவகங்கை
பிள்ளையாா்பட்டியில் மாலையணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சபரிமலை செல்லும் ஐயப்பப் பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
முன்னதாக அதிகாலையில் கருப்பு நிற வேஷ்டி அணிந்து கையில் மாலையுடன் திரளான ஐயப்பப் பக்தா்கள் சரண முழக்கம் எழுப்பியபடி கோயிலுக்கு வந்தனா். அங்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அவா்கள் மாலை அணிந்து கொண்டனா். இதே போல சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கோயில்களிலும் ஐயப்ப பக்தா்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
