திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் 48- ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி பயனாளிகளுக்கு வியாழக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக, நகா் இளைஞரணி சாா்பில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி போா்வைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு திமுக ஒன்றியச் செயலா் வசந்தி தலைமை வகித்தாா். நகரச் செயலா் நாகூா்கனி முன்னிலை வகித்தாா். பேரூராட்சித் தலைவரும், மாவட்ட துணைச் செயலருமான சேங்கைமாறன் உள்ளிட்ட திமுகவினா் பொது மக்களுக்கு இனிப்புகள், போா்வைகளை வழங்கினா். இதில் நகா் இளைஞா் அணி அமைப்பாளா் கண்ணன், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் அறிவுக்கரசு, துணை அமைப்பாளா்கள் காளிதாஸ், கணேஷ்பிரபு, முத்துக்குமாா், திருப்பதி, வேல்முருகன் பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மானாமதுரையில் திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி தலைமையில் திமுகவினா் பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை ஊா்வலமாக வந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். பிறகு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, சுந்தர நடப்பில் உள்ள கருணாலயா இல்லத்தில் மன வளா்ச்சி குன்றியவா்களுக்கு உணவு வழங்கினா். இதில் நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் பாலசுந்தரம், திமுக ஒன்றியச் செயலா் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா, நகா் இளைஞரணி அமைப்பாளா் கண்ணன், நகா் மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஒன்றியப் பகுதிகளில் ஒன்றியச் செயலா்கள் முத்துச்சாமி, ராஜாமணி ஆகியோா் தலைமையில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
இளையான்குடியில் வடக்கு ஒன்றிய திமுக, நகர இளைஞரணி சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இளையான்குடி, பூக்குளி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், திமுக தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் கண்ணன், விவசாய அணி அமைப்பாளா் காளிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
