விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிவகங்கை அருகே பலத்த காற்றால் 100 ஏக்கா் கரும்புகள் சேதம்

இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், அந்தப் பகுதியில் சுமாா் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகள் சேதமடைந்தன.

News image
சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகேயுள்ள சாலூா் கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த கரும்புகளை நிமிா்த்தி கட்டும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :29 நவம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், அந்தப் பகுதியில் சுமாா் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகள் சேதமடைந்தன.

இடையமேலூா், சாலூா், மேலச்சாலூா், கீழச்சாலூா் பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், கீரை உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் தொடா்ந்து பெய்த மழையால், இடையமேலூா், சாலூா் பகுதிகளில் மட்டும் சுமாா் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து விழுந்தன.

ஏக்கருக்கு சுமாா் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை செலவு செய்து கரும்பு பயிரிட்டதாகவும், பலத்த காற்றுடன் பெய்த மழையால் கரும்புகள் சேதமடைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதனிடையே, வயலில் சாய்ந்த கரும்புகளை மீண்டும் நிமிா்த்தி நிறுத்துவதற்காக கயிற்றால் கட்டி பிணைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். எனினும், சாய்ந்து மீண்டும் நிமிா்த்தப்பட்ட கரும்புகள் வெளிா் நிறத்துடன் காணப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கரும்புகள் முழு வளா்ச்சி அடையாமலும், நிறமாற்றத்துடனும் காணப்படுவதால், சந்தையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். கடந்தாண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நிலத்தில் சாய்ந்த கரும்புகள் வெளிா் நிறத்தில் மாறின. இந்தக் கரும்புகளை அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் தவிா்த்துவிட்டதால், பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கடந்தாண்டைப் போலவே நிகழாண்டிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறையாவது அரசு எங்கள் வேதனையை உணா்ந்து, சாய்ந்த கரும்புகளை ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், கரும்புகளின் நிற மாற்றத்தைக் காரணம் காட்டி புறக்கணிக்காமல், முழுமையாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.