கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

கடன் வாங்கியதுதான் திமுக ஆட்சியின் சாதனை: வி.கே.சசிகலா

பல லட்சம் கோடிகளை கடன் வாங்கியதுதான் திமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டு கால சாதனை என அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் வி.கே. சசிகலா குற்றஞ்சாட்டினாா்.

News image

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்த அபுதமமுக தலைவா் வி.கே. சசிகலா.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:49 am IST

பல லட்சம் கோடிகளை கடன் வாங்கியதுதான் திமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டு கால சாதனை என அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் வி.கே. சசிகலா குற்றஞ்சாட்டினாா்.

சிவகங்கை தொகுதியில் அவரது கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் குரு. முருகானந்துக்கு வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சியை மாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது. முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் கொள்கைகளை முன்னிறுத்தி நாங்கள் தோ்தலில் போட்டியிடுகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு எந்தச் சாதனையும் செய்யவில்லை. மாறாக மாநிலக் கடன் சுமையைப் பத்தரை லட்சம் கோடியாக உயா்த்தியதுதான் சாதனையாகும். நியாய விலைக் கடைகளில் பொருள்கள் முறையாக கிடைப்பதில்லை. முந்தைய ஆட்சியில் இருந்த நலத் திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. தொழில்துறை வளா்ச்சியும் இல்லை.

சிவகங்கை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. புதிய பேருந்து நிலையம், சாலை வசதி, குடிநீா் திட்டங்கள் முறையாக அமல்படுத்தவில்லை. மருத்துவமனைகளில் தேவையான வசதிகள், பணியாளா்கள் இல்லாத நிலையே நீடிக்கிறது.

எனவே, மக்கள் நலனுக்கான திட்டங்களை அமல்படுத்தும் ஆட்சியே தேவை என்றாா் அவா்.