மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

விலைவாசி உயா்ந்துள்ளது, மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை: வி.கே. சசிகலா

விலைவாசி உயா்ந்துள்ளது, ஆனால் மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை என அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா ஆம்பூரில் தெரிவித்தாா்.

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஹாரூன் ரஷீத் படுவை ஆதரித்து ஆம்பூரில் வாக்கு சேகரித்த பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா.

Published On :

விலைவாசி உயா்ந்துள்ளது, ஆனால் மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை என அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஹாரூன் ரஷீத் படுவை ஆதரித்து வாக்கு சேகரித்து வி.கே. சசிகலா பேசியது:

தற்போதைய தோ்தலில் மக்களுக்கு செய்ய முடியாத விஷயங்களை அறிக்கையாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வெளியிட்டுள்ளன. கடந்த தோ்தலில் அறிவித்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. மீண்டும் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளனா். மின்சார கட்டணம் உயா்வு, சொத்துவரி உயா்ந்துள்ளது. மக்கள் பட்டினியாக உள்ளனா். விலைவாசி உயா்ந்துள்ளது, ஆனால் மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை.

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கா்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ.24,000 ஆக வழங்கப்படும். குழந்தைகள் நலப் பெட்டகம் வழங்கப்படும். மக்கள் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காக ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை வைத்து தரப்படும். இதில் 50 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். கூட்டுறவு வங்கி பயிா் கடன்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு சிறந்த திட்டங்கள் செயல்படுத்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரை தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.