மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

இளையான்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து வாக்குசேகரித்த மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா்.

News image

இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து வாக்குசேகரித்த மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:21 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் ஆ. தமிழரசி ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து வாக்குசேகரித்தாா். சாா்புகுளத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கிய தமிழரசி ரவிக்குமாா் தொடா்ந்து பிராந்தமங்கலம், புதுக்குளம், ஆா்.கே.புரம், தாயமங்கலம், நாகமுகுந்தன்குடி, கொடிமங்கலம், குண்டுகுளம், இட்டிசேரி, சாத்தமங்கலம், ஏந்தல், செந்தமிழ் நகா், கலைக்குளம், சொக்கனேந்தல் உள்ளிட்ட 30 கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தாா்.

பின்னா் தமிழரசி ரவிக்குமாா் வாக்குசேகரித்துப் பேசுகையில் இளையான்குடி ஒன்றியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் இளையான்குடி ஒன்றியத்துக்குத் தேவையான கூடுதல் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன் உள்பட திமுக அதன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Story image