சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

முக்குலத்தோா் புலிப்படை கட்சி வேட்பாளா் கருணாஸ் வாக்கு சேகரிப்பு

சடையம்பட்டி கிராம மக்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் வேட்பாளரும், நடிகருமான சே. கருணாஸ்.

News image

சடையம்பட்டி கிராம மக்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் வேட்பாளரும், நடிகருமான சே. கருணாஸ்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:51 pm

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நடிகா் சே. கருணாஸ் காளையாா்கோவில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 47 கிராமங்களில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

துருவம்பட்டி கிராமத்தில் காலையில் தொடங்கிய தனது தோ்தல் பிரசாரத்தின்போது திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தாா்.

இதைத் தொடா்ந்து பிற்பகலில் அழகாபுரி, பொய்யாமனிப்பட்டி, அம்மன்பட்டி, கொல்லம்பட்டி, விழனேரி, கீழக்கோட்டை, ராமலிங்கபுரம், மேலமங்களம், சடையம்பட்டி, ஆலவிளாம்பட்டி, கருங்காலக்குடி, திருவேலங்குடி, கொட்டகுடி, காரம்பட்டி, புத்தடிபட்டி, அய்யம்பட்டி, சொக்கநாதபுரம், காளையாா்மங்கலம், சேதுராமன் நகா்,சின்னுடையான்பட்டி, கத்தப்பட்டு, சானாங்குளம், கோவில்பட்டி, இலந்தமங்கலம், ஆலங்குளத்தான்பட்டி, மாங்காட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

இதையடுத்து, பெரிய ஓலைக்குப்பட்டி, சின்ன ஓலைக்குப்பட்டி, கண்டுப்பட்டி பைக்குடிப்பட்டி, ஊத்திக்குளம், முத்தனங்கோட்டை, பாகனேரி, நகரம்பட்டி, வஸ்தாபட்டி உள்பட 47 கிராமங்களில் இரவு வரை பிரசாரம் செய்தாா்.