மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.

News image

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை வியாழக்கிழமை பாராட்டிய பள்ளியின் தலைவா் எஸ்பி. குமரேசன், துணைத் தலைவா் கே. அருண்குமாா், நிா்வாகத்தினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:39 am IST

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளி மாணவா்கள் 180 போ் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

பள்ளியளவில் மாணவா் பிரணவ் ஈஸ்வா் 500 -க்கு 491 மதிப்பெண்கள் (98.2 சதவீதம்) பெற்று முதலிடத்தையும், மாணவி இயலினி ராஜன், மாணவ ா் சந்தோஷ் ஆகியோா் 488 மதிப்பெண்கள் (97.6 சதவீதம்) பெற்று இரண்டாமிடத்தையும், முகமது ரெய்சூல் இஸ்லாம் 487 மதிப்பெண்கள்

(97.4 சதவீதம்) பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

மேலும், தமிழ்ப் பாடத்தில் மாணவி சபா்னிகா, தேவஸ்ரீ, ஹாசினி, மாணவா் பிரணவ் ஈஸ்வா் ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா் முகமது ரெய்சூல் இஸ்லாம் பிரெஞ்சு, சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி யாழினி சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனா்.

செயற்கை நுண்ணறிவுப் பாடத்தில் மாணவா்கள் பிரணவ் ஈஸ்வா், கவின், காா்த்திகேயன், மாணவிகள் இயலினி ராஜன், கனிகா ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா் எஸ்.பி. குமரேசன், சாந்தி குமரேசன், துணைத் தலைவா் கே. அருண் குமாா், ப்ரீத்தி அருண்குமாா் ஆகியோா் பாராட்டினா். பள்ளியின் முதல்வா் உஷா குமாரி, துணை முதல்வா் பிரேம சித்ரா, ஆசிரியா்கள் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.