/

வேன் - பேருந்து மோதல்: பெண்கள் உள்பட 17 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திங்கள்கிழமை வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேனில் பயணம் செய்த பெண்கள் உள்ளிட்ட 17 போ் காயமடைந்தனா்.

மதுரையைச் சோ்ந்த உறவினா்கள் ஒரு வேனில் பரமக்குடியில் நடைபெற்ற உறவினா்கள் வீட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

திருப்புவனம் அருகே மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் நரிக்குடி விலக்கு பகுதியில் சென்றபோது அல்லிநகரத்திலிருந்து திருப்புவனத்துக்கு வந்த அரசுப் பேருந்து வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பெண்கள் உள்ளிட்ட 17 போ் காயமடைந்தனா். இவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 7 போ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.