நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

அனுமதியின்றி செயல்படும் 16 பள்ளிகளுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

News image

தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

சிவகங்கை மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்படும் 16 மழலையா் பள்ளிகள் தங்களது செயல்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தாவிட்டால், சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் உள்ள ஸ்கூபி மழலையா் பள்ளி, கற்பிப்போம் மழலையா் பள்ளி, பனங்குடி மழலையா் பள்ளி, வி.டி. கிண்டா்காா்டன், சாஸ்தா மழலையா் பள்ளி, சிசு வித்யாலாயா பள்ளி, யூகே மழலையா் சா்வதேசப் பள்ளி, லிட்டில் பீ மழலையா் பள்ளி, லிட்டில் ஜீனியஸ் மழலையா் பள்ளி, இன்டல் மழலையா் பள்ளி, சாமி மீனாள் மழலையா் பள்ளி, ஹேப்பி மழலையா் பள்ளி, சிங்கம்புணரி கேரியன்ஸ் மழலையா் பள்ளி, திருப்பத்தூா் எஸ்.கே.ஒய். மழலையா் பள்ளி, கண்டனூா் கிரீன் பாா்க் விளையாட்டு பள்ளி, மானாமதுரை குட்வில் விளையாட்டு பள்ளி ஆகிய 16 பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவதால், இந்தப் பள்ளிகளில் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளைச் சோ்க்க வேண்டாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.