மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

திருப்புவனத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் கைது

திருப்புவனத்தில் அரசுடைமை வங்கி முன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடைமை வங்கி முன் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளா் சங்கத்தினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் நீலமேகம், விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகி ரவி, சிஐடியூ நிா்வாகி அய்யம்பாண்டி உள்ளிட்டோா் மறியலில் பங்கேற்றனா். அப்போது, விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு அமெரிக்காவுடன் வா்த்த ஒப்பந்தம் செய்யக் கூடாது.

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புதிய மின்சார சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. உரங்கள் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தை மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முன்னதாக சந்தை திடலிலிருந்து ஊா்வலமாக வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் அரசுடைமை வங்கி முன்பு மறியலில் ஈடுபட்டனா். பிறகு மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 46 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.