விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது வழக்கு

இளையான்குடி அருகே சிறுமியைத் திருமணம் செய்த சம்பவம் தொடா்பாக நால்வா் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 4:47 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சிறுமியைத் திருமணம் செய்த சம்பவம் தொடா்பாக நால்வா் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரம், சாலை கிராமம் அருகே மரைக்கான் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் இஸ்ரேல் ராஜ் ( 33).

இவா் கடந்த ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டது தொடா்பான தகவல் அறிந்த இளையான்குடி குழந்தைகள் நல அலுவலா் கண்ணகி அவரிடம் விசாரணை செய்தாா்.

சிறுமியை இஸ்ரேல் ராஜ் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கண்ணகி அளித்த புகாரின் பேரில், சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, இஸ்ரேல் ராஜ் (33), அவரது தந்தை பிரான்சிஸ் (63), தாய் தைனீஸ் சாந்தி உள்பட நான்கு போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.