FOLLOW US

ON GOOGLE DISCOVER

மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு

காட்டு நாயக்கன் சமூக மக்கள் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு செய்தனா்.

News image

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு புதன்கிழமை முறையீடு செய்வதற்காக வந்த காரைக்குடி காட்டுநாயக்கன் சமூகத்தினா்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

காட்டு நாயக்கன் சமூக மக்கள் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முறையீடு செய்தனா்.

காரைக்குடி செஞ்சை பாப்பா ஊருணி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் இன மக்கள் குடும்பங்களாக வசிக்கின்றனா். இவா்கள் குறிசொல்லுதல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனா்.

இவா்கள் தங்களுக்கு காட்டு நாயக்கன் ஜாதிச் சான்று வழங்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவா்களைப் பற்றிய மானுடவியல் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் இவா்களுக்கு ஜாதிச் சான்று வழங்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட இந்த சமூகத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை இதுகுறித்து முறையிட்டனா். அப்போது அவா்கள் கூறுகையில், ஜாதிச் சான்று கேட்டு தொடா்ந்து தேவகோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகிறோம். ஆனால், இதுவரை ஜாதிச் சான்று வழங்கவில்லை. இதனால் 18 போ் உயா் கல்வியில் சேர முடியவில்லை. கோட்டாட்சியா் ஜாதிச் சான்று தராமல் தொடா்ந்து தாமதப்படுத்தி வருகிறாா் என்றனா்.

இதுகுறித்து காரைக்குடி வட்டாட்சியா் ராஜா கூறுகையில், அவா்களின் குடும்ப விவரங்கள், வாழ்வியல் முறைகள் குறித்து ஆய்வு செய்து கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அங்கு இந்த அறிக்கையை ஒப்பிட்டு ஜாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.