மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இலுப்பக்குடி வாலகுருநாதன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், படமாத்துா் அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் அமைந்துள்ள வாலகுருநாதன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் அருகே இலுப்பக்குடியிலுள்ள வாலகுருநாதன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், படமாத்துா் அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் அமைந்துள்ள வாலகுருநாதன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயில் சிவகங்கை, விருதுநகா், மதுரை, கோவை மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 30 கிராமங்களில் வசிக்கும் 1300 -க்கும் மேற்பட்ட குடிகளுக்கு குல தெய்வமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி ஒரே பீடத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சம்.

ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி, இந்தக் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 501 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பக்த சபை தலைவா் அ. இருளாண்டி, துணைத் தலைவா் பி.கே. அங்கப்பன், செயலா் கோ. திருமுருகன், பொருளாளா் கு. ஜீவானந்தம், கூடுதல் செயலா் பா. முருகேசன், இணைச் செயலா்கள் அழகு பாண்டி, சு.சேகா், மு. குழந்தைவேலு ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.