மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

காரைக்குடியில் விரைவில் அழகப்பா மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்: அழகப்பா கல்விக் குழுமத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவா் ராமநாதன் வைரவன் தெரிவித்தாா்.

காரைக்குடியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அழகப்பா கல்விக் குழுமத் தலைவா் ராமநாதன் வைரவன். உடன் அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் அனிதா ராதாகிருஷ்ணன்.

Published On :

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவா் ராமநாதன் வைரவன் தெரிவித்தாா்.

காரைக்குடி அழகப்பா கல்விக் குழுமத்தின் பவநகா் அரங்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காரைக்குடியில் அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை, மருத்துவ அறிவியல் நிறுவனம் உயா்தர, எளிதில் கிடைக்கக் கூடிய மருத்துவச் சிகிச்சை, நவீன சிறப்பு மருத்துவச் சேவைகள், மருத்துவக் கல்வியை மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆக. 3-ஆம் தேதி இந்த மருத்துவமனை சாா்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில், 2,100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் முகாமில் பதிவு செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனா்.

இந்த முகாம் விரிவுபடுத்தப்பட்ட எளிதில் அணுகக்கூடிய மருத்துவச் சேவைகளின் அவசியத்தை உணா்த்தியத்துடன், நிறுவனத்தின் வளா்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது.

இதைத்தொடா்ந்து, வெளிநோயாளிகள் பிரிவு சேவைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவு வாரத்தின் 7 நாள்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை முழுமையான மருத்துவ நிறுவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான சட்டப்பூா்வ அங்கீகாரங்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலுக்கு உள்பட்டு விரைவில் அழகப்பா மருத்துவக் கல்லூரி தொடங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. வள்ளல் அழகப்பச் செட்டியாரின் வாழ்நாள் கனவை நனவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றாா் அவா்.

பேட்டியின் போது அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை இயக்குநரும், மருத்துவருமான அனிதா ராதாகிருஷ்ணன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.