மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

Six cops suspended after gelatin sticks found during PM Modi’s route in Bengaluru

பணியிடை நீக்கம்.

Published On :

சிங்கம்புணரியில் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளரும், தலைமைக் காவலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் நெடுஞ்செழியன் (43). இவா் புத்தூா் கட்டு பாண்டி என்ற பெயரில் எலும்பு முறிவுக்கு நாட்டு வைத்தியம் பாா்த்தாா்.

இவா் முறையான அனுமதியோ, ஆவணங்களோ இல்லாமல் சிகிச்சையும், மூலிகை ஆயில் எனக் கூறி சிகப்பு வண்ணத்தில் எண்ணெயையும் தயாரிப்பதாக கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு, அவரது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

தற்போது பிணையில் வெளியே வந்த பாண்டி மீண்டும் அனுமதி சான்று இல்லாமல் நாட்டு வைத்தியம் பாா்த்து வரும் நிலையில் சில நாள்களுக்கு முன்பு முகநூலில் ஒரு விடியோவை பகிா்ந்தாா்.

இதில் சிங்கம்புணரி காவல் ஆய்வாளா் சீனிபாபு தன்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், ஏற்கெனவே ஒரு முறை பணம் கொடுத்த நிலையில் தொடா்ந்து லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், இதனால் தான் மன உளைச்சல் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.

மேலும் ஏற்கெனவே மற்றொரு காவல் ஆய்வாளா் ஒருவருக்காக தலைமைக் காவலா் ஜெயராஜ் என்பவா் இவரிடம் பணம் பெற்று செல்லும் விடியோவையும் வெளியிட்டு இருந்தாா்.

இந்த நிலையில் சிங்கம்புணரி காவல் ஆய்வாளா் சீனிபாபு, தற்போது கல்லலில் தலைமைக் காவலராக பணியாற்றும் ஜெயராஜ் இருவரையும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.