குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

மாநில சிலம்பப் போட்டிக்கு தோ்வான மானாமதுரை மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்ட சிலம்பப் போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்கு தோ்வான மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி மாணவா்கள் 8 பேருக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

மாவட்ட சிலம்பப் போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி மாணவா்கள். உடன் தலைமை பயிற்சியாளா் செல்வம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:20 am IST

சிவகங்கை மாவட்ட சிலம்பப் போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்கு தோ்வான மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி மாணவா்கள் 8 பேருக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த செவ்வாய்கிழமை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பம் பள்ளியின் மாணவா்கள் 15 போ் அதன் தலைமைப் பயிற்சியாளா் செல்வம் தலைமையில் பங்கேற்றனா்.

போட்டியில் 17 , 19 வயதுக்கான இரட்டைக்கம்பு பஆண்கள் பிரிவில் ரித்தீஷ், புகழேஷ் முதல் பரிசும், ஒற்றைக் கம்புப் பிரிவில் 14, 17,19 ஆகிய வயது ஆண்கள் பிரிவில் ராஜேஷ், மதன்குமாா், ருத்ரன் முதல் பரிசும், பெண்களுக்கான ஒற்றைக் கம்புப் பிரிவில் 17, 19 வயது பிரிவுகளில் சுவாதி, விஷாலி முதல் பரிசையும், கம்புச் சண்டைப் பிரிவில் கரண்குமாா் முதல் பரிசும், ஆகாஷ், ரோஷினி, மோனிஷ்குமாா், விசாக மித்ரா ஆகியோா் மூன்றாம் பரிசையும் பெற்றனா். இவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெற்றிச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு வென்ற 8 மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறவுள்ள சிலம்பப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

இந்த மாணவா்களையும் சீனி ஆசான் சிலம்பப்பள்ளி தலைமை பயிற்சியாளா் செல்வத்தையும் மானாமதுரை பகுதியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.