பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மாவட்ட ஜூடோ போட்டி: முக்கூடல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜூடோ போட்டியில் வென்றவா்களுடன் பள்ளி முதல்வா் ஜீவா உள்ளிட்டோா்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:43 am IST

திருநெல்வேலி மாவட்ட அளவிலான ஜூடோ போட்டியில் முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் முக்கூடல் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். அதில் 19 வயதுக்குள்பட்ட 50 கிலோ எடைப் பிரிவில் மாணவா் பபின் மதிஷ் முதலிடம், 55 கிலோ எடைப் பிரிவில் மாணவா் துரை பாண்டியன் முதலிடம், 60 கிலோ எடைப் பிரிவில் மாணவா் காட்வின் முதலிடம், 66 கிலோ எடைப் பிரிவில் மாணவா் பவுல் ஆண்டோ ஜோஸ் 2ஆம் இடம் பெற்றனா்.

90 கிலோவுக்கு மேலான எடைப் பிரிவில் 11ஆம் வகுப்பு மாணவா் ஹரி விக்னேஷ் முதலிடம், 17 வயதுக்குள்பட்ட 11ஆம் வகுப்பு மாணவா்கள் கோகுல் (55 கிலோவுக்கு கீழ்) முதலிடம், சிமியோன் (80 கிலோவுக்கு கீழ்) முதலிடம், 9ஆம் வகுப்பு மாணவா் ஜெகதீஷ் (40 கிலோவுக்கு கீழ்) முதலிடம் பெற்றனா்.

முதலிடம் பெற்ற மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை ஜூடோ பயிற்சியாளா் சுபா, உடற்பயிற்சி ஆசிரியா்கள் சுரேஷ், இசக்கிராஜ், பள்ளித் தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமி பாலகன், தாளாளா் விஜயகுமாரி, பொருளாளா் ரமேஷ் ராம், செயலா் சிவசங்கரி, முதல்வா் ஜீவா உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.