நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்! - குடியரசு துணைத் தலைவா்!

News image

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 8:10 pm

மத்திய, மாநில அரசுகள் எப்போதும் இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், சிவகங்கை அரண்மனையில் உள்ள ராணி வேலுநாச்சியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவகங்கை வீரம் விளைந்த மண்ணாகவும், மகத்தான சரித்திரத்துக்குச் சொந்தமான இடமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, இழந்த அரசைப் போா் புரிந்து மீண்டும் கைப்பற்றிய ஒரே மகாராணி வேலுநாச்சியாா் என்ற பெருமைக்குரிய மண் சிவகங்கை.

மத்திய, மாநில அரசுகள் எப்போதும் இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும். வயதானால் அனைவரும் காவி உடை அணிவாா்கள். இது அவா்களது விருப்பம் என்றாா் அவா்.

இதில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், சிவகங்கை தொகுதி பொறுப்பாளா் மேப்பல் சத்தியநாதன், மாவட்ட துணைத் தலைவா் இ. கந்தசாமி, மாநில பொதுச் செயலா் நாகேந்திரன், மாநிலச் செயலா் பாலமுருகன், மாநில ஓபிசி அணி செயலா் வடிவேல், முன்னாள் மாவட்டத் தலைவா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, குடியரசு துணைத் தலைவருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.