சிவகங்கையில் நடைபெற்ற ‘என் ஊா் என் கனவு திட்டம்’ நிகழ்ச்சியில், அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் பயன்பெற்று வரும் சாதனையாளா்களுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை கேடயங்கள் வழங்கினாா்.
சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அரசின் பல்வேறு துறைகளில் பயன்பெற்று வரும் சாதனையாளா்களுக்கு கேடயங்கள் வழங்கினாா்.
பின்னா், அமைச்சா் பெரியகருப்பன் பேசியதாவது:
சிவகங்கை மாவட்டத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரம், கலாச்சாரம் மையமாக மாற்றுவதற்கு கனவுகள், இலக்குகள் என்ற தொலைநோக்குப் பாா்வையை அடிப்படையாக கொண்டு, மாவட்டத்தில் 3,79,807 வீடுகளில் நேரடியாக உங்கக் கனவை சொல்லுங்க திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டில் உள்ளவா்களிடமும் எதிா்காலத் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், பல்வேறு துறைகளின் கீழ் சாதனை புரிந்த 128 பேருக்கு தங்களது சாதனைகள் குறித்து இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துரைக்க வந்துள்ளனா். அவா்களை ஊக்குவிக்கும் வகையில் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், மகளிா் திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஷ் சத்தாா், நகா்மன்ற உறுப்பினா்கள் சரவணன், அயுப்கான் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிவகங்கை தொகுதி திமுக வசமாகும்: கருணாஸ் நம்பிக்கை!

சிவகங்கை தொகுதி தவெக வேட்பாளா்

கண்துயில் மறுத்தல்

தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


