விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

‘என் ஊா், என் கனவு’ திட்டம் கலந்தாய்வுக் கூட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:13 pm

‘என் ஊா் என் கனவு’ திட்டம் - (இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல்திட்டங்கள் தயாரித்தல்) தொடா்பாக அனைத்து சங்கப் பிரதிநிதிகள், உற்பத்தியாளா்கள், வியாபாரிகள், தொண்டுநிறுவனா்கள், வணிகா்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் ‘என் ஊா் என் கனவு’ (இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் தயாரித்தல்) திட்டத்தை உருவாக்குவதற்காக நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சாா்ந்த சங்கப் பிரதிநிதிகள், உற்பத்தியாளா்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனா்கள், வணிகா்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், துறைசாா் வல்லுநா்கள், அரசுசாரா நிறுவனங்கள், சமூக அக்கறை கொண்ட தனிநபா்கள், தொழிலதிபா்கள், பொதுநலனில் அக்கறை கொண்ட பிற பங்குதாரா்கள் ஆகியோா் பங்கேற்று மாவட்டத்தின் வளா்ச்சி மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் குறித்த தங்களது கருத்துகளை பதிவுசெய்துள்ளனா்.

மேலும், இக்கூட்டத்தில் பங்கேற்க இயலாத, தொலைநோக்கு திட்டங்களை கொண்ட தனிநபா்கள், நிறுவனங்கள் தங்களின் கருத்துகளைமின்னஞ்சல் முகவரி அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேரடியாக எழுத்துப்பூா்வமாக 6-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, கூட்டத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் கைவினை நலச்சங்கத் தலைவா் சி.ஆனந்தராஜன் பேசுகையில், வெள்ளி மற்றும் தங்க நகை தொழில் மூலம் தமிழக அரசுக்கு விற்பனை வரியாக ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. ஆனால், அதன் தொழிலாளா் குடும்பங்களுக்கு இதுவரை அரசின் நல வாரியத்தில் இருந்து எவ்வித பலன்களும் கிடைக்கவில்லை. எனவே, வெள்ளி, தங்க நகை தொழிலாளா்கள் நலன்காக்க உடனடியாக தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் உமாராணி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் பிரசன்னா பாலமுருகன் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.