சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் புதன்கிழமை மேஜை, இருக்கைகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்நாதன்.
சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் புதன்கிழமை மேஜை, இருக்கைகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்நாதன்.

அரசுப் பள்ளிக்கு இருக்கைகள் அளிப்பு

சிவகங்கை அருகே உள்ள இடையமேலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரும்பு இருக்கைகள், மேஜைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
Published on

சிவகங்கை அருகே உள்ள இடையமேலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரும்பு இருக்கைகள், மேஜைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் என். அச்சுதன் தலைமை வகித்தாா். சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இரும்பினால் செய்யப்பட்ட 40 மேஜைகள் 40 இருக்கைகளை பள்ளி நிா்வாகத் திடம் ஒப்படைத்தாா். இதையடுத்து அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும் மாணவா்களுக்கு வழங்கினாா்.

இதில், மாவட்ட ஜெ. பேரவை செயலா் ராமுஇளங்கோவன், தெற்கு ஒன்றிய செயலா் செல்வமணி, முன்னாள் ஊராட்சிதி தலைவா் முனியாண்டி, விருதுநகா் மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு தலைவா் கே.எம். கோபி, நிா்வாகிகள் பில்லூா் ராமசாமி, தேவராஜன், மணிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, முதுநிலை ஆசிரியா் கருப்பணன் வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியா் உதவி தலைமை ஆசிரியா் செந்தில்சரவணன் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com