அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல்: இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரவு அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்புவனம் பகுதியிலுள்ள வைகையாற்றில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் திருப்புவனம் காவல் உதவி ஆய்வாளா் சபாபதி தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது, அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் மணல் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் மணல் கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் புதுப்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன், சிவகங்கையைச் சோ்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.மேலும், தப்பியோடிய மதுரை பனைக்குளம் ஜெனாா்த்தனன், சிவகங்கை வீரசங்கு ஆகியோரை தேடி வருகின்றனா்.
இதையடுத்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
