மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலத்தில் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பாதுகாப்புப் பேரவை நிா்வாகக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அந்த அமைப்பின் கௌரவத் தலைவா் ராஜாமணிராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம், மாநில இணைச் செயலா் வாஞ்சிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மஞ்சுவிரட்டு நடைபெறும் போது, இலவச மருத்துவ முகாம், இலவசக் காப்பீடு, ரத்த தானம் போன்றவற்றை முறைப்படுத்தி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மஞ்சுவிரட்டுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் உள்ள வேறுபாடு குறித்தும் பேசப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் மதுரை மாவட்டச் செயலா் வீரமுத்து, தனுஷ்கொடி, ராஜா ஆகியோா் கலந்து கொண்டு கருத்துரையாற்றினா். புதுக்கோட்டை, ராங்கியம், கல்லல் பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் சிறப்புரையாற்றினா்.
அமைப்பின் கொள்கை பரப்புச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலா் கிட்டு, சிவநேசன், திருப்பத்தூா் ஒன்றியச் செயலா் கதிா், செய்தித் தொடா்பாளா் காா்த்திகாயினி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முடிவில் நிறுவனத் தலைவா் ஆறுமுகம்சேதுராமன் நன்றி கூறினாா்.

