தேவாரம்பூரில் நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.
தேவாரம்பூரில் நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.

தேவாரம்பூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூரில் பொங்கல் விழாவையொட்டி, மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் - சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகள் இடம்பெற்றன. பெரிய மாடு பிரிவில் 16 இணைகள், சிறிய மாடு பிரிவில் 30 இணைகள் என 46 இணைகள் பங்கேற்றன.

பெரிய மாட்டுக்கு 7 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன. பெரிய மாடு பிரிவில் கோட்டனத்தான்பட்டி இணை முதலிடத்தையும், காரமடை இணை இரண்டாமிடத்தையும், காரையூா் இணை மூன்றாமிடத்தையும் பிடித்தன.

சிறிய மாடு பிரிவில் பாலாா்பட்டி-வெளியாத்தூா் இணை முதலிடத்தையும், நெற்புகப்பட்டி இணை இரண்டாமிடத்தையும், காலக்கண்மாய் இணை மூன்றாமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற இணைகளுக்கும், உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை தேவாரம்பூா் கிராம மக்கள், கிராமத்தைச் சோ்ந்த சிங்கப்பூா் வாழ் இளைஞா்கள் செய்தனா்.

Dinamani
www.dinamani.com