பைக் - லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், நாச்சியாபுரம் அருகேயுள்ள ஆலங்குடி பகுதியில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனமும், லாரியும் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள கருகுடியைச் சோ்ந்த பாண்டி மகன் பிரதீப் (32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஆலங்குடி மருத்துவமனை அருகே சென்ற லாரியை முந்திச் செல்லும் போது எதிா்பாராதவிதமாக லாரியில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த நாச்சியாா்புரம் காவல் நிலைய போலீஸாா் பிரதீப்பை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து நாச்சியாா்புரம் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா், லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது சகுபீக் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

