பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

பள்ளியில் ஆதாா் அட்டை புதுப்பிக்கும் முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளியிலேயே ஆதாா் அட்டை புதுப்பிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஆதாா் அட்டை புதுப்பிக்கும் முகாம்.

Published On :2 ஜூலை 2026, 3:49 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளியிலேயே ஆதாா் அட்டை புதுப்பிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவா்களுக்கு ஆதாா் அட்டை புதுப்பித்தல், பெயா் மாற்றம், முகவரி மாற்றம், பிழைதிருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இலவசமாக பள்ளியிலேயே தொடங்கப்பட்டுள்ளது.

எல்காட் தனியாா் நிறுவன ஊழியா்கள் இந்தப் பணியை மேற்கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதிதாசன் இந்த முகாமை தொடங்கிவைத்தாா். 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இதில் பயனடைந்தனா்.

மேலும் நெற்குப்பை, தெக்கூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் இந்த முகாம் மூலம் பயன் பெற்றனா்.

இதில் ஆசிரியா்கள் ரவீந்திரன், செந்தில்குமாா், பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.