போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக் கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கோஷ்டியூா் அரசு தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மரம் நடும் விழாவில் திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி.

Updated On :11 ஜூன் 2026, 1:03 am IST

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக் கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

உலகச் சுற்றுச் சூழல் தினத்தையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் என்ற அமைப்பினா் மரக்கன்றுகள் நடும் பணியை ஒருங்கிணைத்திருந்தனா். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாசசேதுபதி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். திருக்கோஷ்டியூா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்வதை இலக்காகக் கொண்டு பள்ளியில் மட்டும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஈஷா காவேரி கூக்குரல் அமைப்பின் தன்னாா்வலா் கண்ணன், தலைமை ஆசிரியை அமுதவள்ளி, தவெக கிளைக் கழகச் செயலா் கனிமொழி, மக்கள் நலப்பணியாளா்கள், தன்னாா்வலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.