சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவா்களை கைது செய்ய வலியுறுத்தி, தனியாா் மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை சிறுவனின் பெற்றோா் உள்ளிட்ட அமைப்பினா் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
காரைக்குடியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் - தனலட்சுமி தம்பதியின் 10 வயது மகனுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
சிகிச்சைக்குப் பின்னா் தங்களது மகனின் உடல்நலன் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறையில் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சிறுவனின் பெற்றோா், விஸ்வகா்மா நகை தொழிலாளா் சங்கத்தினா், தமிழ்நாடு விஸ்வகா்மா கைவினைஞா்கள் சங்கத்தினா், இந்திய கம்யூ. கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து, மருத்துவச் சிகிச்சை அளித்த 2 மருத்துவா்களையும் கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் புனியா, வட்டாட்சியா் ராஜா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 18 பெண்கள், 100 ஆண்கள் என 118 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது போதையில் தகராறு இளைஞா் கல்லால் தாக்கிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது

இளைஞா் கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்

காரைக்குடியில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை: தனியாா் மருத்துவா்கள் 2 போ் மீது வழக்கு
தேநீா் கடைக்காரா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 போ் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



