8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காரைக்குடி அரசு ஐடிஐ-யில் மாணவா்கள் நேரடி சோ்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

காரைக்குடியை அடுத்த அமராவதிபுதூரில் உள்ள காரைக்குடி அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவா்கள் நேரடி சோ்க்கை வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்

Published On :10 ஜூலை 2026, 5:23 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த அமராவதிபுதூரில் உள்ள காரைக்குடி அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவா்கள் நேரடி சோ்க்கை வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்குடி அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான மாணவா்கள் நேரடி சோ்க்கை வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தில் ஏற்கெனவே உள்ள பொருத்துநா், கடைசலா், இயந்திர வேலையாள் உள்ளிட்ட 2 ஆண்டு தொழில் பிரிவுகளும், பற்றவைப்பவா், கணினி இயக்குபவா் உள்ளிட்ட ஓராண்டு தொழில்பிரிவுகளும், இதனுடன் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தொழில் 4.0 மைய தொழிற்பிரிவுகளான சிஎன்சி மெஷினிங் டெக்னிஷியனும், அடிப்படை வடிவமைப்பாளா், மெய்நிகா் சரிபாா்ப்பாளா் உள்ளிட்ட 2 ஆண்டு தொழில்பிரிவுகளும், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் எண்ம உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநா் ஓராண்டு தொழில்பிரிவுகளும் உள்ளன.

மேற்கண்ட தொழில்பிரிவுகளில் பற்றவைப்பவா் தொழில்பிரிவை தவிர, மற்ற தொழில்பிரிவில் சேர மாணவா்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் பற்றவைப்பவா் தொழில்பிரிவில் சேரலாம்.

இதில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் காரைக்குடி அரசு தொழில்பயிற்சி நிலையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும்போது மாணவா்கள் தங்களது நிரந்தர கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், மாா்பளவு புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியன கொண்டு வரவேண்டும். சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.