ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சாலை விபத்தில் கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:18 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் தம்பிபட்டி மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜாரா மகன் காளிதாஸ் (55). கட்டட ஒப்பந்ததாரரான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பத்தூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தென்கரை பகுதிக்குச் சென்றாா்.

அப்போது, தென்கரை மேம்பாலம் இறக்கத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் எச்சரிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த டிரம்மில் மோதி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த நாத்சியாபுரம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.