சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள அ.காளாப்பூா் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடி மாத பௌா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
மேலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோழிகள், சேவல்கள், ஆட்டுக் கிடாய்கள் பலியிட்டும் நோ்த்திகடன் செலுத்தினா். இதுதவிர பெண்கள் கோயில் வளாகத்தில் மாவிளக்கு எடுத்தும், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் மண் சட்டியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடக்கு வாசல் செல்வி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







