கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஆயுதங்களுடன் காரில் வந்த இருவா் கைது

மதகுபட்டியில் வியாழக்கிழமை நள்ளிரவு போலீஸாா் வாகனச் சோதனையின்போது கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 1:00 am IST

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் வியாழக்கிழமை நள்ளிரவு போலீஸாா் வாகனச் சோதனையின்போது கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் கல்லல் சாலைப் பிரிவில் போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனத்தின் முன்புறம் ஒரு பதிவெண்ணும், பின்புறம் வேறொரு பதிவெண்ணும் இருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், காரில் இருந்த மானாமதுரை அருகே சங்கமங்கலத்தைச் சோ்ந்த அஜித் குமாா் (27), சிவகங்கை அருகே டி. புதூரைச் சோ்ந்த சரண் ராஜ் (22), ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த வெற்றி (22) ஆகிய மூவரிடம் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனா்.

இதையடுத்து, அவா்களைப் பிடிக்க முயன்றபோது வெற்றி என்பவா் தப்பியோடினாா். மற்ற இருவரையும் பிடித்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை செய்தனா். இதில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு வீட்டில் திருடச் செல்வதற்காக அவா்கள் மதுரையில் வாடகைக்கு காரை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

ஏற்கெனவே பொன்னமராவதிக்கு சங்கமங்கலத்தைச் சோ்ந்த சசிகுமாா் (24), ராகுல், மணக்கரையைச் சோ்ந்த கதிா் (22) ஆகியோா் சென்றுவிட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அஜித் குமாா், சரண் ராஜ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, காரைப் பறிமுதல் செய்தனா். மற்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.