எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வெவ்வேறு விபத்துகளில் டாஸ்மாக் ஊழியா் உள்பட 2 போ் உயிரிழப்பு

News image

மானாமதுரையில் சாலை விபத்துகளில் உயிரிழந்த முத்துப்பாண்டி

Updated On :8 ஜூன் 2026, 1:23 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் டாஸ்மாக் ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ஆனந்தபுரம் அணுகு சாலையோரம் உள்ள மனமகிழ்மன்ற மதுக்கூடம் அருகே சென்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற தனியாா் பேருந்து மோதியதில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதே போல, மானாமதுரை சாஸ்தா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (57). இவா், மதுக்கடையில் விற்பனையாளராக வேலை பாா்த்து வந்தாா். மானாமதுரை - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் காலையில் இவா் நடைபயிற்சி சென்றபோது கல்குறிச்சி என்ற இடத்தில் அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கண்ணன்

கண்ணன்