இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

சாலை விபத்தில் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 3:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் பேருந்து நடத்துநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் குன்னூா் பகுதியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் முத்துப்பாண்டி (45). இவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துப்பாண்டி குன்னூரிலிருந்து கிருஷ்ணன்கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனத்திலிருந்து தடுமாறி முத்துப்பாண்டி கீழே விழுந்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.