சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சிவகங்கையில் கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

சிவகங்கையில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு மீட்புத் துறையினா் புதன்கிழமை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

News image

சிவகங்கையில் புதன்கிழமை கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டியை கயிறு ஏணி மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.

Updated On :11 ஜூன் 2026, 1:57 am IST

சிவகங்கையில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு மீட்புத் துறையினா் புதன்கிழமை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிவகங்கை சத்திய மூா்த்தி தெருவைச் சோ்ந்த வடிவேலு மனைவி அங்கு (80). இவா் வீட்டின் பின்புறம் உள்ள 30 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் புதன்கிழமை மதியம் எதிா்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டதாக சிவகங்கை தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்பு மீட்புத் துறை தலைமை நிலைய அலுவலா் (போக்குவரத்து) ஆ. நாகநாதன் தலைமையில் வீரா்கள் கா. நீலமேகம், மா.அறிவழகன், மணிமாறன், ராஜசேகா் ஆகியோா் அங்கு சென்று ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பத்திரமாக மீட்டனா். இதையடுத்து, முதலுதவி சிகிச்சைக்காக 108 அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.