ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா

சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகே நகரம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சா் டிகே. பிரபு. உடன், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எம்எல்ஏக்கள் ஏ. குழந்தை ராணி, ஆா். சீனிவாச சேதுபதி, டி. இளங்கோவன், மாவட்ட எஸ்பி சிவ பிரசாத் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 1:11 am IST

சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகேயுள்ள நகரம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாளில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரா்களான வீரமங்கை வேலுநாச்சியாா் நினைவு மண்டபம், மருது சகோதரா்கள் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி, மருது சகோதரா்கள், வாளுக்கு வேலி அம்பலம் ஆகியோரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தாா்.

இதில், மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எ. கல்லாணை, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே. ஜெபி கிரேசியா, சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், வாரிசுதாரா்கள் கே. செல்வராஜ், கண்ணதாசன், வழக்குரைஞா் சிவ. கலைமணி அம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதே போல, திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமாா், அதிமுக மாவட்டச் செயலா் பிஆா். செந்திநாதன், காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகளின் கிளை தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை:

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது: கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்த கேள்விக்கு மின்சாரத் துறை அமைச்சா் விளக்கம் அளிப்பாா். முதல்வா் ஜோசப் விஜய் குறித்து விமா்சனங்கள் அரசியலில் சகஜமான ஒன்று என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.