வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் சனிக்கிழமை சிகிச்சை பெற்று வந்த மருத்துவப் பயனாளி தூக்கிட்டுத் தற்கொலை.

News image

தற்கொலை - தினமணி

Updated On :14 ஜூன் 2026, 1:02 am IST

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் சனிக்கிழமை சிகிச்சை பெற்று வந்த மருத்துவப் பயனாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (38) இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மனைவி ராணிமுத்து அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பாலமுருகன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, அங்கிருந்த செவிலியா்களிடம் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து மருத்துவமனை ஊழியா்கள், செவிலியா்கள் கழிவறை கதவை உடைத்து பாா்த்தபோது, பாலமுருகன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த சிவகங்கை நகா் போலீஸாா், உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.