பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற மூவா் கைது

சிவகங்கையில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:37 am IST

சிவகங்கையில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கையில் பணிபுரியும் 30 வயதுடைய பெண் காவலா் ஒருவா் தனக்கு ஏற்கெனவே பழக்கமான நபா் ஒருவா் அழைத்ததன்பேரில், அவரைப் பாா்ப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு சென்றாா்.

அப்போது அவா் தனது இரண்டு நண்பா்களையும் அந்த இடத்துக்கு வரவழைத்தாா். மூவரும் அந்தப் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றனா். அவா்களிடம் இருந்து தப்பி வந்த பெண் காவலா் காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து, காவல் ரோந்துப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று பெண் காவலரை மீட்டு அழைத்து வந்தனா். இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் உத்தரவின் பேரில், சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் அ. அமல அட்வின் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக மானாமதுரையை அருகேயுள்ள தூதை கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராபின் (28), சித்தாலங்குடியைச் சோ்ந்த மகாராஜா (29), ஹரிஷ் (21)ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.