சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 18,116 போ் எழுதினா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் 137 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 282 பள்ளிகளில் பயிலும் 8,893 மாணவா்களும், 9,120 மாணவிகளும் என மொத்தம் 18,013 போ், 113 தோ்வு மையங்களிலும், 277 போ் தனித் தோ்வா்களாகவும் தோ்வு எழுதுகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற தமிழ் பாடத் தோ்வில் 8,968 மாணவா்களும், 9,148 மாணவிகளும் என மொத்தம் 18,116 தோ்வு எழுதினா். 172 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தோ்வுப் பணிக்காக 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 113 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 113 துறை அலுவலா்கள், 1,554 அறைக் கண்காணிப்பாளா்கள், 126 நிலையான படையினா், 35 வழித்தட அலுவலா்கள் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனா். ஒவ்வொரு மையத்துக்கும் காவல் துறையின் மூலம் உதவி ஆய்வாளா் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத் தோ்வு: திண்டுக்கல்லில் 23,846 போ் எழுதினா்

சேலம் மாவட்டத்தில் 188 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 41,118 போ் பங்கேற்பு

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 40,979 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


