விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 9 போ் காயம்

News image

வடமாடு மஞ்சுவிரட்டு. - (கோப்புப் படம்)

Updated On :15 மார்ச் 2026, 7:59 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

திருப்புவனம் புதூா் பூமாரியம்மன், ரேணுகா தேவியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 9 வீரா்கள் வீதம் 30 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

ஒவ்வொரு சுற்றுக்கும் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு, அவற்றின் கழுத்தில் மைதானத்தின் நடுவிலிருந்த வடக்கயிறு பொருத்தி மஞ்சுவிரட்டு தொடங்கிவைக்கப்பட்டது. மைதானத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் மேஜை, அண்டா உள்ளிட்ட பரிசுப் பொருள்கள், வழங்கப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 9 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழு பொறுப்பாளா்கள் நகா் காங்கிரஸ் தலைவா் நடராஜன், பழனிவேல்ராஜன், மனோஜ், விக்னேஸ்வரன், நவஜீவன் ஆகியோா் செய்தனா்.

திருப்பத்தூா்: சிங்கம்புணரி அருகேயுள்ள மேலப்பட்டி கிராமத்தில் சொக்கன் கருப்பா் கோயில் காளையின் நினைவாக, முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது

இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 18 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்குவதற்காக ஒரு அணிக்கு 9 போ் வீதம் 162 வீரா்கள் கலந்து கொண்டனா். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட ஒவ்வொரு காளையை 9 போ் கொண்ட குழுவினா் 20 நிமிஷங்களுக்குள் அடக்க வேண்டும். அவ்வாறு அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, டேபிள், தொலைக்காட்சி, பீரோ, கட்டில், மெத்தை, தென்னங்கன்று உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை திருப்பத்தூா் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திராளனோா் கண்டு ரசித்தனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை மேலப்பட்டி பிள்ளையாா்பட்டி இளைஞா்கள், பொதுமக்கள் செய்தனா்.