ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

சிவகங்கையில் தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image

சிவகங்கையில் தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி.

Updated On :26 மார்ச் 2026, 3:08 am IST

சிவகங்கையில் தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் அதிநவீன மின்னணு விடியோ தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் தயாரானது. இதன் பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தே.ஜெபி கிரேசியா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ராஜாசெல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.