எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆராவயலில் வியாழக்கிழமை நடைபெற்ற குதிரை வண்டிப் பந்தயத்தில் பாய்ந்து சென்ற குதிரைகள்.

Updated On :8 மே 2026, 12:46 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை அருகே ஆராவயலில் சண்முகநாதபுரம் வீரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 26 குதிரை வண்டிகள் பங்கேற்றன. பெரிய குதிரை வண்டி, சிறிய குதிரை வண்டி என இரு பிரிவுகளாக தேவகோட்டை சாலையில் ஆறாவயல் சண்முகநாதபுரம் முதல் கல்லுப்பட்டி வரை பந்தயம் நடைபெற்றது.

பெரிய குதிரை பிரிவில் 11 வண்டிகளும், சிறிய குதிரை பிரிவில் 15 வண்டிகளும் என 26 குதிரை வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் அதிவேகத்தில் பாய்ந்து சென்ற குதிரை வண்டிகள் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு முந்திச் சென்றன. இந்தப் போட்டியை சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் நின்று கண்டுகளித்தனா். இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த குதிரை வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன.